01.ஒன்றைப் பற்றி தொடர்ந்து எண்ணிக் கொண்டிருப்பதும்,
ஆராய்ந்து கொண்டிருப்பதும் தான் சிந்தனை. இதன் மூலம்
தான் செயலைச் செய்ய முடியும். சிந்தனை தான் நமது
வாழ்வின் அஸ்திவாரம் வாழ்வே இதனால் தான்
ஆக்கப்பட்டது என்கிறார் புத்தர்.

02.சிந்தனையில் தெளிவு இருந்தால் நமக்கு வரும்
சோதனையைக் கூட சாதனையாக மாற்றிவிட முடியும்.
நாம் நினைத்தால் நல்ல சிந்தனையை மட்டுமே வளர்த்துக்
கொள்ள முடியும்.

03.எந்த விஞ்ஞானியும் கண்டுபிடித்தே ஆகவேண்டும்
என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டமையால் தான். மருந்துகளும் அறுவை சிகிச்சைக் கருவிகளும் கண்டு
பிடிக்கப்பட்டன.

04.முன்னேற்றமான வளவாழ்வை திட்டமிட்டு அடைவதற்கு
சிந்தனையின் ஒருமைப்பாடு மட்டுமே துணைபுரியும்.
சிந்தனை சலனப்படும்பொழுது அது பலவீனம் அடையும்.

05.சலனமற்ற ஒரே நிலையில் நிரந்தரமாகச் சிந்தனை
இருக்கும் பொழுது பேராற்றலை உற்பத்திச் செய்யும்.
சிந்தனை ஒருமுகப்பட்டு ஒரே இலக்கு நோக்கிப் பாய்ந்து
செல்லும் போது அதற்கு அப்பாற்பட்டு எதுவுமே இருக்க
முடியாது.

06.சிந்தனையில் தொடர்ந்து ஈடுபடும் பொழுது நம்முடைய
அறிவு நாளுக்கு நாள் பெருகும். சிந்தனையே ஆழமான
அறிவுக்கு வித்தாக அமையும். அந்த அறிவின் தன்மை
வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.

07.சிந்தனையிலிருந்து பயனுள்ள அறிவை வெளியில்
கொண்டு வந்து செயலில் காட்டினால் தான் வெற்றி
பெற முடியும். சிந்தனைப் பெருகும் போது அறிவு வளரும்.

08.அறிவு தெளிவு பெறும்போது மனநிலையில் வரவேற்கத்
தகுந்த பல மாறுதல்களை உண்டு பண்ணும். அதன்மூலம்
முன்பு செய்து இருக்காத பல காரியங்களைச் செய்ய முடியும்.

09.சிந்தனையும்செயலும் இணைந்து இயங்குகின்றபோதுதான்
நாம் மேற்கொண்டகாரியத்தில வெற்றி பெற முடியும்.
சாதாரண மனிதன் கூட தன்னுடைய சக்தியினை
ஒருமுகப்படுத்தி முயற்சிப்பதின் மூலம் சாதனைப் பெற
முடியும்.

10.சிந்தனையை ஒரு முகப்படுத்துவதுதான் உறுதியான பலன்
தரத்தக்க வெற்றிக்கு வழி காட்டுகின்றநல்ல குணமாகும்.

11.நாம் விரும்புகின்ற ஒவ்வொரு சிந்தனையும் நமது விருப்பப்படியே அமையும். நாம் விரும்பாத எந்தச்சிந்தனையும் தானாகவே தோன்றாது. நல்ல சிந்தனையை நினைக்க வேண்டிய அதிகாரமும் உரிமையும் நம்மிடம் இருக்கும் பொழுது எப்படி வெற்றி பெற முடியாமல் போகும்?
12.நல்ல சிந்தனை மட்டுமே நிலைக்க வேண்டும் என்றுபிடிவாதமாக இருந்தால் கெட்ட சிந்தனை எப்படியும் இடம் பெறாது.
13.ஒரு இலட்சியத்தை சிந்தனையிலே முளைக்க வைத்து விட்டு நன்றாக வேர் விட்டு வளரும் வகையில் அதைப் பற்றிசிந்தித்துக்கொண்டிருந்தாலே போதும். அதுதானாகவே வெற்றி பெற்று விடும்.
14.சவாலானசெயல்கள் ஒப்படைக்கப்படும் போது, அல்லது
நம்மை நாடி அவை வரும் போது நம்மைச் சோதிக்க
வருவதாய் எண்ணாமல் திறமைகளை வெளியுலகுக்கு
உணர்த்த அருமையானதோர் வாய்ப்பு என எண்ணி மகிழ
வேண்டும்
.
15.இதை நான் திறமையாகச் செய்து முடிப்பேன் என அடிக்கடி
கூறி நம் உடல் செல்களுக்கு உற்சாகம் ஊட்ட வேண்டும்.

16.எந்த எண்ணமாக இருந்தாலும், யாருடனும் பேசுவதாக இருந்தாலும், எந்தச் செயல் செய்வதாயிருந்தாலும் அவைகளை விரும்பினால்போதும், நூறுக்கு நூறு சதவீதம் விரும்பினால் மட்டுமே போதுமானது,இந்த விருப்பமானது உடல் செல்களைத் தூண்டி, மன ஆற்றலை அதிகரித்து குவித்து முடித்து வைக்கும்
17.ஒன்று ஒத்தி வைப்பதற்கு அடிப்படையாக இருப்பது
மலைப்பும் சோம்பலும் என்பதால்,அவைகளை முதலில்
அகற்றி விட்டால் ஒத்தி வைக்கும் எண்ணம் வராது,
என்னால் முடியும்; நான் இதை முடிப்பேன்; இப்போது
முடிக்கவில்லையென்றால், வேறு எப்போது முடிப்பது;
போன்ற சுய சங்கல்பங்களை தினமும் நம் ஆழ்மனதுக்கு
கட்டளையாகக்ம்.c இதனால் மன அலையும், உடல்
செல்களும் எதற்கும் தயார் என்ற நிலைக்கு உயர்ந்து
விடும்.
18.நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக
ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு
செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள்
வந்து சேரும். வெற்றிகளை வரவேற்க நீங்கள் தயாராகுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக