சனி, 24 ஜூலை, 2010

வாழ்வில் வெற்றி பெற்றவர்களிடம் காணப்படும் சிறப்பான எட்டுப் பண்புகள்



















இன்றைய நடைமுறையை புரிந்து கொண்டு செயல்படும் அறிவு பெறுதல் (Comman Sence)

தான் மேற்கொண்டுள்ள துறையில் சிறப்பான அறிவுடன் செயல்படுதல் (Knowing one’s field)

தான் எடுத்துக் கொண்ட இலட்சியத்தில் வெற்றி பெற்றே தீருவோம் என்ற தன்னம்பிக்கை பெறுதல் (Self reliance)

ஒரு செயலை அலசி ஆய்ந்து விரைந்து முடிவு எடுக்கும் அறிவு புத்திசாலித்தனமும் (General intellegence)

எடுத்த செயலைச் செய்து முடிக்கும் திறமை (Ability to get things done)

தலைமைத் தன்மை (Leadership)
ஆக்கப்பூர்வமான சிந்தனை (Creativity)

மற்றவர்களோடு நல்ல உறவு (relationship with others)

1500 சாதனையாளர்களை ஆராய்ந்ததில் இந்த எட்டு பண்புகளும் இவர்களிடம் காணப்பட்ட சிறப்புத் தன்மைகளாகும்.

உங்கள் மகனளை- மகனை படிப்பில் – பண்பில் சிறந்தவர்கள் உருவாக்குவது எப்படி?

 
 


  
1. மாறாத அன்பு செலுத்துக.


2. தவறுகளை மன்னித்து ஏற்றுக்கொள்க.


3. திறமை, அறிவு குறைந்தவர்கள் யாருமில்லை. துறைகள் வேறாக       இருக்கலாம். ஒப்பிட்டு மட்டம் தட்ட வேண்டாம்.


4. நல்ல எதிர்பார்ப்பையே எப்போதும் வெளிப்படுத்துங்கள். உங்கள்   நம்பிக்கையை குழந்தைகள் புரிந்து கொண்டால் அதன்படி .
நடந்து நிறைவேற்றுவார்கள்

5. தினமும் குழந்தைகளோடு சிறிது நேரம் செலவழியுங்கள். அவர்கள் சொல்வதை முழுமையாகக் கேளுங்கள்.


6. முன் மாதிரியாக எல்லா விஷயங்களிலும் நடந்து கொள்ளுங்கள்.


7. குழந்தைகளிடம் வாக்குக் கொடுத்தால் காப்பாற்றுங்கள், ஏமாற்ற வேண்டாம்.


8. தண்டனை கொடுப்பது நிரந்தரத் தீர்வல்ல. அன்பான வழிகளை ஆய்ந்து செய்க.


9. முன்பு தண்டனை கொடுத்திருந்தால், உள்ளே காயம் இருக்கும். அதனை அவர்களோடு அமர்ந்து பேசி, அக்காயங்களை
ஆற்றுக.


10. திறமைகளைக் கண்டுபிடித்து, ஊக்கம் கொடுத்து, அவர்கள் விரும்பிய படிப்புக்கு அனுப்புங்கள். திணிக்க வேண்டாம்.


11. அக்கறை காட்டுங்கள். அதிகாரம் செலுத்த வேண்டாம்.


12. “தேர்வு மார்க்குகள்” முக்கியம்தான், ஆனால் முயன்றும் மார்க்           பெறாவிட்டால் வெறுக்க வேண்டாம். அவர்களின் திறமை வேறு துறைகளில் இருக்கலாம். அதைக் கண்டு பிடித்து, தன்னம்பிக்கை ஊட்டினால் வாழ்வில் ஜெயிப்பர்.


13. குடும்பத்தினர் ஒரு வேளையாவது சேர்ந்து உண்க. உண்ணும்போது
T.V. வேண்டாம்.

14. குழந்தைகளுக்கு பொறுப்புகளைக் கொடுங்கள். தப்பாகச் செய்தாலும் பரவாயில்லை.

15. நீண்ட அறிவுரைகள் வேண்டாம்.

16. குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர் குடும்பப் பொருளாதார நிலையைச் சொல்லிவிடுக.


17. வாழ்விற்குக் கலைகள் அவசியம் (Right Brain Activation) பரத நாட்டியம், இசை, இசைக் கருவிகளைக் ஓவியம் முதலியவற்றில் கற்றல், விடுமுறைகளில் ஈடுபட வைக்கவும்.


18. கேள்விகளுக்குப் பொறுமையாக பதில் சொல்லுங்கள். கேள்விகளைக் கேட்கத் தூண்டுங்கள். பதில் தெரியாவிட்டால், தெரிந்து சொல்லுங்கள்.


19. தக்க இடத்திற்கு அனுப்பி யோகாசனப் பயிற்சிகள், தியானப் பயிற்சிகளைக் கற்றுக் கொடுங்கள்.


20. அவர்களின் வாழ்வின் இலட்சியத்தினை அடையத் துணை புரியுங்கள்.


21. குழந்தைகளின் முன்பு கணவன், மனைவி சண்டையிட வேண்டாம். அவர்களிடம்   உங்களின்     நன்மதிப்புக் குறைந்துவிடும்.    அவர்களின்
மனமும் அமைதியிழக்கும்.


22. வீடு அன்பு நிறைந்த, சந்தோஷமான இடமாக இருக்க வேண்டும். அச்சூழ்நிலை குழந்தை களின் வளர்ச்சிக்குத் துணைபுரியும்.

கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்!

1.    உங்களிடம் உள்ள திறமையைக் கண்டறியுங்கள்.



2.    உன்னிடம் நம்பிக்கை வை உயரலாம்.



3.    எந்தச் செயலையும் தொடங்குவதைவிட தொடர்ந்து இருப்பதே சிறந்தது.



4.    உங்களது உன்னதத் தீர்மானங்களை முடிவு செய்யுங்கள்.



5.    உங்களிடம் உள்ள தடைகளை அகற்றுங்கள்.



6.    சரியான முறையில் செயல்திட்டமிட்டு, உரிய நேரத்தில் செய்தால் வெற்றி நிச்சயம்.



7.    சரியான இலக்கு, நேர்மையான திட்டம், விரைவான செயல்பாடு இவை வெற்றியின் தாரக மந்திரம்.



8.    பொறுப்புணர்ந்து கடமையுணர்வுடன் அனைத்தையும் செய்யுங்கள்.



9.    உங்களது வார்த்தைகளிலும்,செயல்களிலும்,நம்பிக்கையும்,நேர்மையும் முதன்மையாக இருக்கட்டும்.




10.    எந்த நல்ல செயலையும் தள்ளிப் போடாமல் உடனே செய்யுங்கள்.