சனி, 28 ஆகஸ்ட், 2010

உங்கள் லட்சிய பயணத்தில் எளிதாக வெற்றி பெற சொல்ல வேண்டிய அபிராமி அந்தாதி

நூல்



ஞானமும் நல் வித்தையும் பெற

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை

துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே



பிரிந்தவர் ஒன்று சேர



துணையும் தொழுந்தெய்வமும் பெற்றதாயும் சுருதிகளின்

பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங்

கணையும் கருப்புச் சிலையுமென் பாசாங்குசமும் கையில்

அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே



குடும்பக்கவலையிலிருந்து விடுபட



அறிந்தேன் எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு

செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப்

பிறிந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்

மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே



உயர்பதவிகளை அடைய



மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி

குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றை வார்சடைமேல்

பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே



மனக்கவலை தீர



பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர் முலையால்

வருந்திய வஞ்சி மருங்கல் மனோன்மணி வார்சடையோன்

அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயமேல்

திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே



மந்திர சித்தி பெற



சென்னியது உன் பொன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே

மன்னியது உன்திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே

முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே

பன்னியது என்றும் உன்றன் பரமாகம பத்ததியே



மலையென வருந்துன்பம் பனியென நீங்க



ததியுறு மத்திற் சுழலும் என் ஆவிதளர் விலதோர்

கதியுறு வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்

மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கியென்றும்

துதியுறு சேவடியாய் சிந்துரானன சுந்தரியே



பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட



சுந்தரி எந்தை துணைவி என் பாசத்தொடரை யெல்லாம்

வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்

கந்தரி தைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே



அனைத்தும் வசமாக



கருத்தன எந்தைகள் கண்ணன் வண்ணக் கனகவெற்பிற்

பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்

திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்

முருத்தன மூரலும் நீயும் அம்மே வந்தேன் முன் நிற்கவே



மோட்ச சாதனம் பெற



நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை

என்றும் வணங்குவது உன்மலர்த்தாள் எழுதாமரையின்

ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்து

அன்றும் பிறந்தவளே அழியா முத்தி ஆனந்தமே



இல்வாழ்க்கையில் இன்பம் பெற



ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்

வானந்த மான வடிவுடையாள் மறை நான்கினுக்கும்

தானந்த மான சரணாரவிந்தத் தவளநிறக்

கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே



தியானத்தில் நிலை பெற



கண்ணியதுன்புகழ் கற்பதுன் நாமம் கசிந்து பத்தி

பண்ணியதுன் இரு பாதாம் புயத்தில் பகல் இரவா

நண்ணிய துன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே



வைராக்கிய நிலை எய்த



பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின்கரந்தவளே கறைக்ண்டனுக்கு

மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே

மாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே



தலைமை பெற



வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்

சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே

பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்

சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே



பெருஞ்செல்வமும் பேரிண்பமும் பெற



தண்ணளிக்கென்று முன்னே பல கோடி தவங்கள் செய்வார்

மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர்தம்

விண்ணளிக்கும் செல்வமும் அழியாமுத்தி வீடுமன்றோ

பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே



முக்காலமும் உணரும் திறன் உன்டாக



கிளியே கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும்

ஒளியே ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா

வெளியே வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே

அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே



கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய



அதிசயமான வடிவுடையாள் அரவிந்தமெல்லாம்

துதிசெய ஆனன சுந்தரவல்லி துணை இரதி

பதிசயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்

மதிசயமாக வன்றோ வாம பாகத்தை வவ்வியதே



மரணபயம் நீங்க



வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்

செவ்வியும் உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகி வந்து

வெவ்விய காலன் என் மேல் வரும்போது வெளிநிற்கவே



பேரின்ப நிலையடைய



வெளிநின்ற நின்திரு மேனியைப்பார்த்தென் விழியும் நெஞ்சும்

களிநின்ற வெள்ளம் கரைகண்ட தில்லை கருத்தினுள்ளே

தெளிநின்ற ஞானம் திகழ்கின்றதென்ன திருவுளமோ

ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே



வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக



உறைகின்ற நின்திருக்கோயில் நின்கேள்வர் ஒருபக்கமோ

அறைகின்ற நான்மறையின் அடியோ முடியோ அமுதம்

நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ என்றன் நெஞ்சகமோ

மறைகின்ற வாரிதியோ பூரணாசல மங்கலையே



அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய



மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச்

சங்கலை செங்கைச் சகலகலா மயில்தாவு கங்கை

பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண் கொடியே



இனிப்பிறவா நெறி அடைய



கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த

படியே மறையின் பரிமளமே பனிமால் இமயப்

பிடியே பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே

அடியேன் இறந்திங்கு இனிப்பிறவாமல் வந்து ஆண்டுகொள்ளே



எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க



கொள்ளேன் மனத்தில்நின் கோலமல்லாதமென்பர் கூட்டந்தன்னை

விள்ளேன் பரசமயம் விரும்பேன் வியன்மூவலகுக்கு

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளதே விளைந்த

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே



நோய்கள் விலக



மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணிபுனைந்த

அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்

பிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே

பணியேன் ஒருவரை நின்பத்மபாதம் பணிந்தபின்னே



நினைத்த காரியம் நிறைவேற



பின்னே திரிந்துன் அடியாரைப்பேணிப் பிறப்பறுக்க

முன்னே தவங்கள் முயன்று கொண்டேன் முதல் மூவருக்கும்

அன்னே உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே

என்னே இனியுன்னை யான்மறவாமல் நின்று ஏத்துவனே



சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக



ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு

சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்

நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே



மனநோய் அகல



உடைத்தனை வஞ்சப்பிறவியை உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை நெஞ்சத்தழூக்கையெல்லாம் நின் அருட்புனலால்

துடைத்தனை சுந்தரி நின்னருள் ஏதென்று சொல்லுவதே



இம்மை மறுமை இன்பங்கள் அடைய



சொல்லும் பொருளும் என நடமாடும துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்

அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்

செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே



எல்லா சித்திகளும் அடைய



சித்தியும் சித்தி தரும் தெய்வமாகித் திகழும் பரா

சக்தியும் சத்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்

முத்தியும் முத்திக்கு வித்தும் வித்தாகி முளைத்தெழுந்த

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே



விபத்து ஏற்படாமல் இருக்க



அன்றே தடுத்தென்னை ஆண்டுகொண்டாய் கொண்டதல்ல என்கை

நன்றே உனக்கினி நான் என்செயினும் நடுக்கடலுள்

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே

ஒன்றே பல உருவே அருவே என் உமையவளே



மறுமையில் இன்பம் உண்டாக



உமையும் உமையரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு

எமையும் தமக்கின்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே



துர்மரணம் வராமலிருக்க



ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்கைப்

பாசத்தில் அல்லல் பட இருந்தேனை நின்பாதமென்னும்

வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட

நேசத்தை என் சொல்லுவேன் ஈசர்பாகத்து நேரிழையே



இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க



இழைக்கும் வினைவழியே அடுங்காலன் எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய் அத்தர் சித்தம் எல்லாம்

குழைக்கும் களபக்குவிமுலை யாமைளக் கோமளமே

உழைக்குமூ பொழுது உன்னையே அன்னையே என்பன் ஒடிவந்தே



சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க



வந்தே சரணம் புகுமூ அடியாருக்கு வானுலகம்

தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்

பைந்தேன் அலங்கற் பருமணி ஆகமும் பாகமும் பொன்

செந்தேன் மலரும் அலர்க்கதிர் ஞாயிறும் திங்களுமே



திருமணம் நிறைவேற



திங்கள் பசுவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க

எங்கட்கு ஒருதவம் எய்தியவா எண்ணிறந்த விண்ணோட

தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ தரங்கக்கடலுள்

வெங்கட் பணியனை மேல்துயில் கூரும் விழுப்பொருளே



பழைய வினைகள் வலிமை அழிய



பொருள் பொருள் முடிக்கும் போகமே அரும்போகம் செய்யும்

மருளே மருளில் வரும் தெருளே என்மனத்து வஞ்சத்து

இருளேது மின்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்றன்

அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே



நவமணிகளைப் பெற



கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன

மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்

பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்

திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே



வேண்டியதை வேண்டியவாறு அடைய



பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்

தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்

துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்

அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே



கருவிகளைக் கையாளும் வலிமை பெற



ஆளுமைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அநத்கன்பால்

மீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்

மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்

மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே



பூர்வ புண்ணியம் பலன்தர



வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்

பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்

காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு

பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே



நல்லடியார் நட்புப் பெற



புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்

கண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்

நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்

பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே



உலகினை வசப்படுத்த



இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து

வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை

நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்

படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே



தீமைகள் ஒழிய



பரிபுரச்சீறடிப் பாசங்குசை பஞ்சபாணியின் சொல்

திருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்

புரிபுரவஞ்சரை அஞ்சங்குனி பொருப்புச் சிலைக்கை

எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே



பிரிவுணர்ச்சி அகல



தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்

அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால்

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்

துவளேன் இனியரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே



உலகோர் பழியிலிருந்து விடுபட



தொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே

பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்

கண்டு செய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவேமா

மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே



நல்நடத்தையோடு வாழ



வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர்

பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்ட

கறுக்குந் திருமிடற்றாள் இடப்பாகம் கலந்த பொன்னே

மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே



யோக நிலை அடைய



வாழும் படியன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்

வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்

ஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல்

சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே



உடல்பற்று நீங்க



சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்

படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்

இடரும் தவிர்த்து இமைப்பொது இருப்பார் பின்னும் எய்துவரோ

குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரும்பையிலே



மரணத்துன்பம் இல்லாதிருக்க



குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட

வரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து

அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்த அஞ்சல் என்பாய்

நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே



அம்பிகையை நேரில் காண



நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு

வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று

ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே



மோகம் நீங்க



அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அகரர்தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே

சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்

மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே



பெருஞ் செல்வம் அடைய



வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த

ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு

செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே



பொய்யணர்வு நீங்க



சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யட்டும்

பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த

கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத்

தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே



கடன் தீர



இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு

நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்

கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்

செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே



மோன நிலை எய்த



மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற(து)

அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு

முன்னாய் நடுவெங்குவமாய் முடிவாய முதல்விதன்னை

உன்னாது ஒழீயினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே



யாவரும் வசமாக



ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்

நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே

பொன்றாது நின்ற புரிகின்றவா இப்பொருளறிவார்

அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே



வறுமை ஒழிய



ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்

உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்

செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்

மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே



மன அமைதி பெற



அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்

தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக்

கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்

சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே



பிள்ளைகள் நல்லவர்களாக வளர



தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே

நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்

அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்

பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே



மெய்யுணர்வு பெற



பாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க

மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்

மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு

நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே



மாயையை வெல்ல



நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து

நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்

பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்

தாயே மலை மகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே



எத்தகைய அச்சமும் அகல



தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத

வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்

கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்

செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே



அறிவு தெளிவோடு இருக்க



தேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக்

கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்

ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்

வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே



பக்தி பெருக



வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு

பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்

பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக்

காணேன் இருநிலமும் திசை நான்கும் சுகனமும்



ஆண்மகப்பேறு அடைய



ககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம்

தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்

முகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்

மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே



கவிஞராக



வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம்

பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு

வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த

சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே



பகைவர்கள் அழிய



தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு

மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாறும் குடில்கள் தொறும்

பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே



நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக



பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்

ஊரும் உருகு சுவையளி ஊறொளி ஒன்றுபடச்

சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே

சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே



சகல சௌபாக்கியங்களும் அடைய



தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா

மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே



நுண்கலைகளில் சித்தி பெற



கண்களிக்குமூபடி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்

பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்

மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்

பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே



மனக்குறைகள் தீர



அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்

பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின்

குழவித் திருமடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க

இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே



பிறவிப்பிணி தீர



என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்

தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே



குழந்தைப்பேறு உண்டாக



தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு

யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த

சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை

நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே



தொழிலில் மேன்மை அடைய



நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்

அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்

பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவர் பாடவும்பொன்

சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே



விதியை வெல்ல



தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி

மங்குவர் மண்ணில் வழவாப் பிறவியை மால்வரையும்

பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்

கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே



தனக்கு உரிமையானதைப் பெற



குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து

மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி

வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில்

பறித்தேன் குடிபுகு தும்பஞ்பாண பயிரவியே



பகை அச்சம் நீங்க



பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா

வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே

செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே



சகல செல்வங்களையும் அடைய



செப்பு ம்கனக கலசமும் போலுந் திருமுலைமேல்

அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்

கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்

துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே



கட்டுகளில் இருந்து விடுபட



விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன

வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்

பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்

குழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே



பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட



கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை

ஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம்

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா

ஆட்டி நடமாடகத் தாமரை ஆரணங்கே



நன்னடத்தை உண்டாக



அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிறேன் நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்

பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே



மன ஒருமைப்பாடு அடைய



அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்

ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்

களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு

வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே


ஏவலர் பலர் உண்டாக



விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம்

இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்

பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்

உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே



சங்கடங்கள் தீர



உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்

சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்

இடையாளை எங்கள் பெம்மான் இங்கு என்னையினிப்

படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே



துன்பங்கள் நீங்க



பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு

ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்

தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும்

வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே



ஆயுத பயம் நீங்க



மால் அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற

காலையும் சூடகக் கைகையும் கொண்டு கதித்த கப்பு

வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்

பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே



செயற்கரிய செய்து புகழ்பெற



மொழிக்கும் நினைவுக்கும் எட்டாது நின்திருமூர்த்தி என்றன்

விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை

அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்

பழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே



எப்போதும் அம்பிகை அருள்பெற



பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்

தரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம்

புரமென்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்

சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே



யோக சித்தி பெற



சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத்

துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற

உறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு

மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே



கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க



வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து

இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்

பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு

விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே



அரசாங்கச் செயலில் வெற்றி பெற



மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்

புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை

சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப்

பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே



மன நிலை பக்குவமடைய



பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன்

இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்

மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்

முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே



உள்ளத்தில் ஒளியுண்டாக



நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு

முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த

வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்

மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே



மனநிலை தூய்மையாக



விரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்

அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து

சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம்

தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே



மன உறுதி பெற



நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது

ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்

அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக்

குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே



எங்கும் பெருமை பெற



கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்

யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய

சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்

ஆமளவும் தொழுவர் எழுபாருக்கும் ஆதிபரே



புகழும் அறமும் வளர



ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன்

போதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி

காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே



வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற



தைவந்து நின்னடித் தாரை சூடிய சங்கரற்குக்

கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே

மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்

பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே



அருள் உணர்வு வளர



குயிலாய் இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன்

மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த

வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே



அம்பிகையை மனத்தில் காண



குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்

விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே



நூற் பயன்



ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்

பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக்

காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் கருப்பு வில்லும்

சேர்த்தா¬ முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே

சனி, 21 ஆகஸ்ட், 2010

சிறந்த தலைமை பொறுப்பாளருக்கு தேவையானது



                                           உங்களிடம் கற்றது


01.இது இப்படித்தான், இவர் இப்படித்தான் என்கிற தனிப்பட்ட முடிவை முன்கூட்டியே எடுக்கக் கூடாது.

02. பல வழிகளையும் ஆராய்ந்து முடிவெடுக்கும் திறன்.

03. மனதை எப்போதும் தெளிவாக வைத்திருத்தல்.

04. எல்லோரிடமும் ஆலோசனை பெறுதல்.

05. அனைத்து ஊழியர்களையும் மதிப்புடன் அரவணைத்துச் செல்லுதல்

06. திறந்த மனதுடன் எல்லோரிடமும் பழகுதல்

07. உடனுக்குடன் ஊழியர்களின் குறைகளைக் களைதல்.

08. மற்றவர்களின் திறமையைப் பாராட்டிப் பேசுதல்.

09. முகஸ்துதிக்கு ஆளாகாமல் இருத்தல்

10. எந்த ஒரு issueவிலும் ஒரு clinical approach வைத்துக்கொள்வது.

11. ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆராய்ந்து அதனை அவன்  கண்விடல்’ என்ற குறளுக்கு இலக்கணமாக செயல்படுவது.